நம்முடைய பர்ஸை எப்போதும் பணம் நிரம்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். நடக்கிற காரியமா இது! சில பேர் இப்படியும் சிந்திக்கலாம். நிச்சயமாக நடக்கும். உங்களது பர்ஸை நீங்கள் முறையாக பராமரித்து வந்தால் அதில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு சுலபமான வழி தான். எந்த ஒரு பெரிய பரிகாரமும் இல்லை. முயற்சி செய்துபார்ப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய பர்ஸை நாம் முறையாக பராமரித்து வந்தாலே போதும். மகாலட்சுமி சுலபமாக அதில் வந்து குடியேறி விடுவாள்.
முதலில் நீங்கள் உங்களுக்காக வாங்கப்படும் பர்ஸ் பிங்க், பச்சை, நேவி ப்ளூ, பர்ப்பிள் இந்த நிறங்களில் இருந்தால் பணத்தை அதிகமாக ஈர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. – நீங்கள் வாங்கக்கூடிய பர்ஸின் அளவு நோட்டை கசக்கும் அளவிற்கு சிறியதாக இருக்கக் கூடாது. பண நோட்டுகள் விரித்து வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும். நோட்டுகளை கசக்கி திணித்து வைக்கக்கூடாது. உங்களுடைய பர்சில் எப்போதும் எண்கோணம் வடிவில் இருக்கும் கண்ணாடி வைத்துக்கொள்வது சிறப்பான ஒரு விஷயம். ஏன் என்றால் இந்த எண்கோண கண்ணாடியானது உங்கள் பர்ஸில் என்ன இருக்கின்றதோ அதை பன்மடங்காக பெருக்க கூடியது ஒன்று. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
பர்ஸ்ஸில் கட்டாயம் பண நோட்டுகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் காலியான பர்ஸ், காலியாக தான் இருக்கும். ஏனென்றால் இந்த எண்கோண கண்ணாடியின் செயல்பாடு அப்படி. அடுத்ததாக ஐந்து ஏலக்காய்களை ஒரு பச்சை பட்டு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி பர்ஸில் வைக்கும் அளவிற்கு வைத்துக்கொள்ளலாம். முடியவில்லை என்றால் சின்ன பச்சை நிற காகிதத்தில் மடித்து வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இது உங்களை கடன் வாங்க தூண்டாது. ஏற்கனவே நீங்கள் கடனை வாங்கியவர்களாக இருந்தாலும் அந்த கடனை விரைவாக திருப்பிக் கொடுக்க இது உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
இவை எல்லாவற்றையும் பின்பற்றினால் கூட, உங்களிடம் இருக்கும் பர்ஸை உங்கள் கைக்காசை போட்டு வாங்காமல், உங்களின் மனதுக்கு பிடித்தவர் கைகளால் அதாவது, மனைவியாக இருக்கலாம், உங்கள் குழந்தையின் சேமிப்பில் வாங்கிய பரிசாக இருக்கலாம், உங்களது தாய் தந்தை வாங்கி கொடுத்ததாக இருக்கலாம். இப்படி சென்டிமென்டாக இருக்கும் பர்ஸை உபயோகப்படுத்துவது நல்ல வருமானத்தை கொடுக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன். அதாவது உங்களிடம் நிறைய காசு சேர வேண்டுமென்று நல்ல எண்ணம் இருக்கும் அல்லவா? அவர்கள் கையிலிருந்து முடிந்தவரை பர்ஸை கிஃப்டாக பெற்றுக் கொள்ளுங்கள்.