கூடி வருகிறது கொரோனா குறைந்து வருகிறது முகக்கவசம்

கொரோனா

கோலாலம்பூர், மார்ச் 10-
மலேசியாவின் முக்கிய நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறிய கிராமங்கள் வரையில் மக்கள் அதிகமாகத் தேடுவது எங்காவது முகக்கவசம் கிடைக்காதா என்பதைத்தான்.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகள் காரணமாக அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருளாக முகக்கவசம் மாறி வருகிறது என்றாலும் அதனை தேடிப் பிடித்து வாங்குவதற்கு மலேசியர்கள் திணறி வருகிறார்கள்.

பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரையில் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் மலேசியர்களுக்கு முகக்கவச தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாகி வருகிறது.

பெரும்பாலான கடைகளில் முகக்கவசம் கிடைப்பதில்லை. மாறாக, ‘இங்கே முகக்கவங்ம் இருப்பில் இல்லை’ என்ற வாசகம்தான் அதிகமாகக் தொங்கி வருகிறது. மலேசிய உள்நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here