பெய்ஜிங், மார்ச் 17 –
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டாலும் அங்கு வேறு விதமான சிக்கல் உருவாகி உள்ளது.
தம்பதியினர் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுய தனிமைப்படுத்தப்படுவதால் நாட்டில் விவாகரத்து விகிதம் உயர்ந்துள்ளது என்று சீன திருமண பதிவுத்துறை அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து விகிதம் முன்பை விட அதிகமாக உயர்ந்துள்ளது என தென்மேற்கு சீனாவின் தாஜோவில் உள்ள திருமண பதிவுத்துறை மேலாளர் லு ஷிஜூன் கூறி உள்ளார்.
பிப்ரவரி 24 முதல் விவாகரத்து பெற 300 க்கும் மேற்பட்ட ஜோடிகள் பதிவு செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.