பெக்கான் காவல் நிலையத் தடுப்புக் காவலில் இருந்த 6 பிள்ளைகளின் தந்தையான 44 வயது ஆடவர் மரணம்

பகாங், பெக்கான் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 வயது கட்டிடத் தொழிலாளி அக்டோபர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார். அவர் ஆறு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கைக் கையாளும் Suara Rakyat Malaysia (Suaram) மற்றும் Gerakan Guaman Rakyat (Gegar) ஆகிய NGOக்கள், முஹம்மது ஹிதாயத் அப்துல் ஹலீம் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952ன் பிரிவு 15(1)ன் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறினர்.

Suaram திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அல்ஷாத்ரி அப்துல்லா கூறுகையில், ஹிதாயத்துக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றார்.

இது இந்த ஆண்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 13 மரணமாக இருக்கலாம் என்று அவர் மலேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (சுஹாகம்) ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்த பிறகு கூறினார்.

உயிரிழந்தவரின் சகோதரர் அஹ்மத் ஃபைஸ், ஹிதாயத் போதைப்பொருளுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டதாக கூறினார்.

அவரது மனைவி நோர் நசிபா, அக்டோபர் 8 ஆம் தேதி காலை 11 மணியளவில்  ஒரு பஜெரோ காரில் பெக்கான் போலீஸ் தலைமையகத்திலிருந்து  போதைப்பொருள் துடைத்தொழிப்பு அதிகாரிகளில்   இரண்டு பேர் பின் கதவு வழியாக நுழைந்து ஹிதாயத்தை கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

அதே நாள் இரவு 9 மணியளவில், ஒரு சார்ஜென்ட் வாஹிதி, போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் ஹிதாயத் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்க நாசிபாவை அழைத்ததாக ஃபைஸ் கூறினார்.

அக்டோபர் 11 ஆம் தேதி காலை 8 மணியளவில், ஒரு போலீஸ் அதிகாரி தனது கணவர் இறந்துவிட்டார் என்பதை தெரிவிப்பதற்கு முன்பு அவரது கணவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததா என்று கேட்க அழைத்தாக கூறினார். நாசிபாவிடம் மதியம் 2 மணிக்கும், மீண்டும் இரவு 10.55 மணிக்கும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும்படி கேட்கப்பட்டது.

தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீ மர்னி ஜைனால் அபிதினைச் சந்திக்க, அக்டோபர் 12 அன்று குவாந்தனில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு நோர் நசிபா அழைக்கப்பட்டார். அதனால் அவரது கணவரின் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர் விளக்கவில்லை.

உயிரிழந்தவரின் தொடையில் ஒரு காயம் இருப்பதாக மருத்துவர் அவளிடம் கூறினார். ஆனால் அதற்கும் அவரது மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இறப்புச் சான்றிதழில் இறந்த நேரமும் குறிப்பிடப்படவில்லை என்று குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் சியாஸ்வானி மன்சோர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here