அமைதி அமைதி அமைதி

அமைதி அமைதி அமைதி

கோலாலம்பூர், மார்ச் 18-

கூச்சல் குழப்பம், தடுமாற்றம் இவைமூன்றும் இன்றைய எதிரிகளாக இருக்கின்றன, இதற்கு மாறாக அமைதியாக இருக்கவேண்டும் என்கிறார் மாமன்னர்.

ஆளாலுக்கு முன் யோசனை சொல்லலாம், எவர் சொன்ன சொல்லாயினும் உண்மைப் பொருள் காண்பதறிவு என்றிருக்கவேண்டும். அனுபவசாலி யார் என்று உடனடியாகத் தீர்மானத்திற்கு வரும் ஆற்றல் எல்லாரிடமும் இருப்பதில்லை.

அறிவுரை ஆலோசனை சொல்லும் உரிமை அனுபவ சாலிகளுக்கு உண்டு. அவர்களைத் தீர்மானிப்பதில் காலவிரயம் ஆகிவிடும்.

இக்காலம் இக்கட்டான காலம். எந்தச்செயலும் ஒருங்கிணைக்கப்பட்ட செயலாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்.

இதைத்தான் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா அலோசனை கூறியிருக்கிறார்.

முழுமையாக ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற வாக்கியத்தை அவர் வலியுறுத்துகிறார். அரசாங்கம் எதைச்செய்கிறதோ அதை முழுமையாக ஏற்கவேண்டும். எதைச்செயல் படுத்துகிறதோ அதைப் பின்பற்றவேண்டும். இதுதான் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

இதிலிருந்து விலகினால் பேராபத்து முன்னுரை செய்யாமல் காத்திருக்கும். அதற்கு ஒரே பதில் அமைதி என்பதுதான் என்று அரண்மனைக் காப்பகத்தின் டத்தோ அஹ்மட் ஃபாடில் சம்சுடின் தெரிவித்திருக்கிறார்.

இன்று முதல் மார்ச் 31வரை மக்களின் பொது நடமாட்டங்கல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இக்கால கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையான செயல் நடவடிக்கைத் திட்டங்களைப் பிரதமரே அறிவிப்பார். அதைப் பின்பற்றுவதுதான் மக்களின் கடமையாகும்.

இன்றைய நிலவரப்படி 673 பாதிப்புகள் என்று அதிகாரப்பூர்வ செய்தி கூறுகிறது. இதன் வளர்ச்சி மோசமாகிக்கொண்டே போகிறதென்றால் மக்கள் சரியான அறிவிப்பை அலட்சியப் படுத்துவதாகவே எண்ணத்தோன்றுகிறது. இக்குணம் மாறவேண்டும்.

அரசாங்கத்தோடு மக்கள் ஒத்துழைத்தால் மாற்றத்தை விரைவில் காணமுடியும். இல்லையே ஏமாற்றத்தைதான் சந்திக்க வேண்டிவரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் எடுக்கும் துரித நடவடிக்கைகள் கொரோனா 19-ஐ விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும் .இதற்கு மக்கள் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கிறது. அமைதியும் ஒத்துழைப்பும் தந்தால் அகற்றுவிடும் கொரோனா 19.
மக்களின் துன்பம் மேலும் அதிகமாகாமல் இருக்க அமைதி அவசியமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here