கொரோனா 19 பாதிப்பில் தனிமைப் படுத்துதலுக்கு 14 நாட்கள்

தனிமைப் படுத்துதலுக்கு 14 நாட்கள்

கோலாலாம்பூர். மார்ச் 18-

கொரோனா 19-இன் சந்தேகம் இருக்குமாயின் தாங்களே முன்னிலைப் படுத்திக்கொள்வதை சுகாதார அமைச்சு வரவேற்கிறது. இதில், சந்தேகத்திற்குரியவர்களைத் தனிமைப்படுத்தும் அவசியத்தை சுகாதார அமைச்சு கடைப்பிடித்தும் வருகிறது.

தனிமைப் படுத்தப்படும் 14 நாட்களை எந்த வகையில் சேர்ப்பது என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இதற்கான பதிலை ஆள்பல ஆற்றல்துறை அறிவித்திருக்கிறது. தனிமைப் படுத்தப் படுகின்றவர்களுக்கான 14 நாட்கள் பாதிக்கப்பட்டவர்களின் வருடாந்திர விடுமுறையில் கழிக்கப்படக் கூடாது என்று அறிவித்திருக்கிறது.

இந்த நாட்கள் மருத்துவ விடுப்பாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறது. பதிவு பெற்ற மருத்துவரின் சான்றிதழ் அதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

தனிமைப் படுத்தப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவ விடுப்பு, மருத்துவ விடுப்பாக இல்லாவிட்டால் முதலாளிமார்கள் தொழிலாளர் சட்டத்தை மீறியதாகக் கருத்தப்பட்டு அபராதமும் செலுத்த வேண்டிவரும்.

வருடத்தில் 14 முதல் 22 நாட்கள் வரை மருத்துவ விடுப்புக்குத் தகுதியுடைவர்களாக இருக்கும் தொழிலாளிகள் இதுபோன்ற நிலையில், சோதனக்காக தனிமைப்படுத்தப் பட்டால் மறுத்துவ விடுப்பாகக் கருதப்படவேண்டும். இதை வருடாந்திர விடுப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஆள்பல அமைச்சு அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here