சட்டவிரோத அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 52 பேர் கைது

கோலதிரெங்கானு: சட்டவிரோத அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கருதப்படும் ஆறு பெண்கள் உட்பட 52 பேரை திரெங்கானு போலீசார் கைது செய்தனர்.

திரெங்கானு குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் முஹமட் மர்ஜுகி முகமட் மொக்தார் கூறுகையில், நேற்று இரவு 9 மணியளவில் 16 முதல் 52 வயதுக்குட்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர்கள் அனைவரும் மலேசிய சங்கங்களின் பதிவுத் திணைக்களத்தில் (JPPM) பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒப்புக்கொண்டனர், வங்கிகளில் மாதாந்திர தவணைப்பணத்தை பாக்கி வைத்திருக்கும் வாகனங்களை இழுப்பதுதான் இவர்களது வேலையாகும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுநீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் மெத்தாம்பேட்டமைன் க்கு சாதகமான பதிலை பெற்றனர். அத்தோடு கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் ‘அயஹந்தா (‘Ayahanda)’ என்ற அமைப்பின் தலைவர்களாக இருந்தனர்.

“இந்த மூன்று நபர்களும் வன்முறை மற்றும் போதைப்பொருள் போன்ற முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தனர்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த வழக்கு சமூக  சட்டம் 1966 பிரிவு 43 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பபடலாம் என்று முஹமட் மர்ஜுகி முகமட் மொக்தார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here