ரந்தாவ் பாஞ்சாங்:
இங்குள்ள Gual Periok இல் உள்ள கம்போங் பாவா லெம்பாவைச் சேர்ந்த ஒரு இளை ஞன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெள்ளநீரை கடக்கும் வாகனமாக மோட்டார் சைக்கிளை மாற்றி உருவமைத்துள்ளார்.
முகமட் கல்மிரு ஜுஹைரி அப்துல்லா, 27, கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்கு மேகொண்ட இந்த முயற்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெள்ளத்தால் ரரந்தாவ் பாஞ்சாங் கடுமையாக பாதிக் கப்பட்ட பிறகு இந்த யோசனையை தாம் யோசித்ததாக அவர் ஊடகங்களிடம் கூறி னார். மோட்டார் சைக்கிளை மாற்ற தனது மாமா மஸ்லான் முகமது (45) தமக்கு உதவியதாக அவர் கூறினார்.
இந்த வாகனம் உயரும் நீரில் சரியாக வேலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த நாங் கள் சுமார் ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
தேவையான மாற்றங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு நாங்கள் RM500 தான் செலவழித்தோம்,இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெரியவர்கள் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த இளைஞனின் இப்புத்தக்க முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு விமர் சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


















