பினாங்கு, மார்ச் 22-
கோவிட் 19 அச்சமின்றி இந்தோனேசிய சென்றவர்கள் தனிமைப் படுத்தப்படவேண்டும். அவர்கள் 83 பேர் மலேசியர்கள் நாடு திரும்பினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சுப்படிகிறது.
எண்ணெய் நிலையம், பேரங்காடிகளில் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்போது இந்தோனேசியாவிற்குச் சென்றவர்கள் மிக நெருக்கமாகவே இருந்திருப்பார்கள்.
இவர்கள் நாடு திரும்பியது 14 நகட்கள் தனிமைப்படுத்தியே ஆகவேண்டியிருக்கும். அதற்குச் சரியான இடமாக பினாங்கு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூலாவ் ஜெர்ஜாக் தீர்வு பொருத்தமான இடமாக இருக்குமென்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொகிதீன் அப்துல் காதர் கூறியிருக்கிறார்.
நாட்டில் அனுசரிக்கப்படும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் பல்வீனம் இருக்கிறது. இதனால் கொரோனா 19 ஒழிப்பு நடவடிக்கை முழுமையான நிறைவை அடைய முடியவில்லை. இதற்குச் சரியான தீர்வாக பூலாவ் ஜெர்ஜா தீவு தனிமைப்படுத்துவதற்குப் பொருத்தமாக அமையும் என்றார் அவர்.
முழுமையான பூட்டல் எனும் இயல் நிலைக்கட்டுப்பாட்டிற்கு மாறினால் மட்டுமே இதற்கான தீர்வாக அமையும் என்றும் கருத்து தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரியவர்களை தனிமைப்படுத்துவதற்கு பூலாவ் ஜெர்ஜாக் தேர்வு செய்யப்படுமானால் மக்களின் பய உணர்ச்சி நீங்கும். இத்தீவு 1875-இல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. வெளிநாட்டவர்களைச் சோதிக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.