தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் பணி புரியுங்கள் பல் மருத்துவ நிபுணர்களுக்கு அறிவுறுத்தல்

பல் மருத்துவ நிபுணர்களுக்கு அறிவுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 24-

அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் அனைத்து பல் மருத்துவ நிபுணர்களும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் பணிபுரிய வேண்டுமென மலேசிய பல் மருத்துவர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தலை எதிர்கொள்ள கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடிமக்களாக அந்த உத்தரவைப் பின்பற்றி நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

அதே சமயம் காற்றில் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வெளிப்புற நடவடிக்கையிலும் நாம் ஈடுபடக்கூடாது.

அதன் அடிப்படையில் பல் மருத்துவர்கள் அனைவரும் முடிந்த வரை முன் பதிவுகளை ரத்து செய்து கொள்ளலம்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் அளிக்கலாம் என இந்த அமைப்பின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பல் வலி (முக வீக்கம்), வாய்ப் பகுதிகளில் வலி (மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத போது), வாய்ப்பகுதியில் ரத்தம் கசிதல், பல் பிடிப்பு (brace) சம்பந்தப்பட்ட வேலைபாடுகள், வாய் – பல் பகுதிகளில் முறிவு போன்ற சம்பவங்களுக்குப் பல் மருத்துவர்கள் மருத்துவம் செய்யலாம்.

அச்சூழ்நிலையிலும்கூட இந்த கொரோனா நோய் குறித்த பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here