தலைக்குமேல் வெள்ளம் என்றால் தகாதது அல்ல தடியடி

சுகாதாரத்துறை துணை இயக்குநர் நூர் இஷாம்

கோலாலம்பூர். மார்ச் 25-

மக்கள் நட்மாட்டக் கட்டுப்பாடு இன்னும் திருப்தியளிக்கவில்லை என்ற தோற்றத்தில் இருப்பதால் இன்னும் தீவிரம் காட்ட வேண்டிய நிலைமைக்கு மாறும் சுழல் உருவாகலாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குநர் நூர் இஷாம் அப்துல்லா கூறியிருக்கிறார்.

மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மக்கள் சிலரின் ஒத்துழையாமை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழையாமை கடைப்பிடிக்கப்படாவிட்டால் இத்தாலி நாட்டின் நிலைமைக்குத்தான் ஆளாகவேண்டியிருக்கும்.

அந்நிலைக்கு வராமல் இருக்கத்தான் அமைதியாக, வெளியில் நடமாடாமல் இருக்கும்படி கூறப்படுகிறது.
ஆனாலும் அந்நடவடிக்கை மீறப்படும்போது வேறென்ன செய்யமுடியும்?

பிடிவாதகொள்கையில் இன்னும் மாற்றம் காணப்படவில்லையென்றால் பரிகாரம் காண்பதைத்தவிர வேறுவழியில்லை. அந்தப் பரிகாரம் தடியடியாகவும் இருக்கலாம்.

கொரோனா 19 இன்னும் கட்டுப்படவில்லை. இதற்கு மக்கள்தாம் காரணம். மக்களே மக்களுக்கு உதவமுன்வரவில்லை என்றால் மக்களே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படாவிட்டால் கட்டுப்படுத்துவதே முக்கியமானதாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here