மேலும் மூவர் பலி: 2,031 பேருக்கு கொரோனா!

கோலாலம்பூர் –

கோவிட்-19 கொரோனா வைரஸுக்கு நேற்று மேலும் மூவர் பலியானார்கள். இதனை அடுத்து நாட்டில் இந்தத் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு கண்டிருக்கிறது.

அதே வேளையில் நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2,031 ஆக அதிகரித்திருக்கிறது. அலோர்ஸ்டார், சுல்தானான் பாஹியா மருத்துவமனையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்த 63 வயது ஆடவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலாங்கூர் ஸ்ரீ பெட்டாலிங்கிலுள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுள் அவரும் ஒருவர் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

குளுவாங் மாவட்ட மருத்துவமனையில் மார்ச் 23ஆம் தேதி சேர்க்கப்பட்ட இன்னோர் ஆடவர் நேற்றுக் காலை மரணமடைந்தார்.

ஈப்போ மருத்துவமனையில் மூன்றாவது நபர் நண்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். இதனிடையே நேற்று மேலும் 235 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது.

அவர்களுள் 60 பேர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here