காலம் வரட்டும்

காலம் வரட்டும்

கொரோனா என்பது அழகான பெயர் என்ற நினைப்பில் இருக்கின்றவர்கள் அதிகம். அதன் ஆபத்தை உணராதவர்கள் இன்னும் அதிகம். அதனல் தான் உலகம் முழுவதும் இந்நோய்த்தொற்று ஆபத்தை நோக்கி உல்லாசமாய் பவனி வந்துகொண்டடிருக்கிறது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதும் பொய்யாகிவிட்டது. கொரோனா அனுமதியில்லாமல்  திருமணம் செய்துகொள்வதிலும் அர்த்தமில்லை.

திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீற்களா. கொரொனாவிடம்  அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியுமா?

கொரோனா என்ன செய்துவிடும் என்று எகத்தாளமாக இருப்பது உங்கள் விருப்பம் என்றும் விட்டுவிடலாம். அப்படி நடந்தால் சமுகப் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டது போலாகிவிடும்.

பொறுப்பு என்பது யாரிடம்  இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வி.

சரி, அனைவருக்கும் உயிர்ப் போராட்டமாக இருக்கின்றபோது யாரையும் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் இருக்கிறது.  இந்த நேரத்திலும் ஒன்றைச்சொல்லிவிட்டுத்தான் ஓட வெண்டியிருக்கிறது. தனிமை நோக்கி ஓடுங்கள் என்பதே முக்கியம்.

இது சமுதாயக் கடமை. கடப்பாடு என்றாலும் தகும். இக்கட்டான இத்தருணத்தில் திருமணம் என்பது சிக்கனமா என்பதெல்லாம் முக்கியமல்ல. சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் முக்கியம்.

திருமணம் என்பது உறவினர்கள் ,நண்பர்களால் வாழ்த்தப்பட வேண்டும். இத்தருணத்தில் திருமணம் சாத்தியமா? கொரோனா இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதில் அறுதியில்லை. உயிருக்கும் உத்திரவாதமில்லை.

மகிழ்ச்சியானது திருமணம். மகிழ்ச்சியத் தொலைத்துவிட்டு திருமணம் செய்துகொள்வதில்  அர்த்தமும்மில்லை. அதைவிட தம்பதியர் இருவரும்  குழந்தைக்கு ஆசைப்படுவது பொருத்தமான எண்ணமாக இல்லை.  தாய்மையைக் கூட ஒத்திப்போடலாம் தப்பாகாது.

கருவில் உதிக்கும் குழந்தைக்கு கொரோனா வராது என்பதல்ல. இதில் உறதியான மருத்துவத் தெளிவு இல்லை.

திருமணம், குழந்தை இரண்டுமே ஒத்திப்போடப்பட வேண்டியது மிக அவசியமாகிறது. வேண்டாம்  விஷப்பரீட்சை. காலம் வரட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here