பூர்வக்குடியினர் விடுபட்டுவிடக் கூடாது

ஈப்போ, ஏப்ரல் 2-

ஜாக்கோவா என்பது பூர்வக்குடியினர் அமைப்பு. இக்காலக் கட்டத்தில் பூர்வக்குடியினர் பற்றியும் மறந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கும் உணவு விநியோகம் செய்யப் பட்டிருப்பதை ஜாக்கோவா தெரிவித்தது.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் பூர்வக்குடியினரும் கைவிடப்பட்டவர்களாக இருந்துவிடக் கூடாது என்று பேராக் மாநில ஜாக்கோவா இயக்குநர் ஹாருல்னிஸாம் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இங்குள்ள 15 பூர்வக்குடி கிராமங்களின் 4,300 உறுப்பினர்கள் இதனால் பயனடைந்திருக்கின்றனர்.

சில கிராமங்களில் இவர்களின் பயிர்களை யானைகள் அழித்திருக்கின்றன. கொரோனா தொற்று அறிவிப்புக்கு முதல்நாள் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கும் பூர்வக்குடியினர்களுக்கு அதியாவசியப் பொருட்கள் இன்றியமையாததாய் இருப்பதை ஹாருல்னிஸாம் உணர்த்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here