ஜெனீவா,ஏப்ரல் 5-
சீனாவின் உகான் நகரில் முதல் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 205 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா – 311,357 ஸ்பெயின் -126,168, இத்தாலி – 124,632, ஜெர்மனி – 96,092, சீனா – 81,669 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.