24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக குறைந்தது உயிரிழப்பு – மீண்டு வரும் ஐரோப்பிய நாடு

இத்தாலி: இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது.கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இத்தாலி இருந்து வந்தது.

அமெரிக்காவில்(21,969 பேர் உயிரிழப்பு) இந்த நோயின் தாக்கம் அதிகமானதால் இத்தாலி, 19,000-க்கும் மேற்பட்டோரை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 156,363 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று மட்டும்) 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,899-ஐ தொட்டுள்ளது. கடந்த 24 நாட்களாக இத்தாலியில் கொரோனாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை

 • மார்ச் 19 – 427 பேர்
 • மார்ச் 20 – 627 பேர்
 • மார்ச் 21 – 793 பேர்
 • மார்ச் 22 – 651 பேர்
 • மார்ச் 23 – 601 பேர்
 • மார்ச் 24 – 743 பேர்
 • மார்ச் 25 – 683 பேர்
 • மார்ச் 26 – 712 பேர்
 • மார்ச் 27 – 919 பேர்
 • மார்ச் 28 – 889 பேர்
 • மார்ச் 29 – 756 பேர்
 • மார்ச் 30 – 812 பேர்
 • மார்ச் 31 -837 பேர்
 • ஏப்ரல் 1 – 727 பேர்
 • ஏப்ரல் 2 – 760 பேர்
 • ஏப்ரல் 3 – 766 பேர்
 • ஏப்ரல் 4 – 681 பேர்
 • ஏப்ரல் 5 – 525 பேர்
 • ஏப்ரல் 6 – 636 பேர்
 • ஏப்ரல் 7 – 604 பேர்
 • ஏப்ரல் 8 – 542 பேர்
 • ஏப்ரல் 9 – 610 பேர்
 • ஏப்ரல் 10 – 570 பேர்
 • ஏப்ரல் 11 – 619 பேர்
 • ஏப்ரல் 12 – 431 பேர்

மார்ச் 19-ஆம் திகதிக்கு (427 பேர் பின்னர் மூன்று வாரங்கள் கழித்து முதல் முறையாக இத்தாலியில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை (431 பேர்) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால் மக்களும், மருத்துவ ஊழியர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here