உணவு தேடச்சென்றவர் உயிர் இழந்தார்

குவந்தான், ஏப்.16-

உணவு தேடிச்சென்றவர் சாலையோரத்தில் சரிந்து உயிரிழந்தார்.
முதியவரான அந்நபர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று நம்ப்பபடுகிறது, பசி, நோய் காரணமாக அல்ல என்று லிப்பிஸ் காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்டெண்ட் அஸ்லி முகமட் நூர் கூறினார்.

தகவலறந்து செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினர் அந்த நபரைச் சோதிக்கச் சென்றதாகவும், அவர் இறந்துவிட்டதை அறிந்ததகவும் அந்த அதிகாரி கூறினார்.
அந்த மனிதன் தனியாக இருந்தவர். ஆனால் அருகில் வசித்த நெருங்கிய உறவினரைக் கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரிந்தது.

அவரை பிரேத பரிசோதனைக்காக போலிசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர், பசியால் அல்லது நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார் என்று கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றார் அவர் .

ஏப்ரல் 13ஆம்நாள் திங்கட்கிழமை தனது வீட்டை விட்டு அவர் வெளியேறும்போது, ​​பசியிலிருந்து பலவீனமானவராகத் தென்பட்டதாகவும் ​​உணவைத் தேடுவதற்காக வெளியானதகவும் தெரியவந்தது என்று அஸ்லி கூறினார்.

ஒரு வழிப்போக்கர் சரிந்துகிடந்த அவரைக் கண்டு தகவல் கொடுத்திருக்கிறார்.
தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலிசார் அந்நபரை ஜாலான் கோலா கெச்சாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர், மேலும் அவருக்கு சில உணவுப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here