தனிநபரை ஏமாற்றி 40 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக இரு எம்ஏசிசி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரண்டு அதிகாரிகள் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை “தீர்த்து வைக்க”  40,000 வெள்ளியை  தனிநபரிடம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

குளுவாங் கிளை எம்ஏசிசியின் உதவி கண்காணிப்பாளர் அமீர் இஷாம் ஷாகக் 32, குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஜோகூர் எம்ஏசிசியின் கண்காணிப்பாளர் வான் கமருல் ஜெய்ம் வான் மன்சோர் 34, நீதிபதி அஹ்மத் கமல் ஆரிஃபின் இஸ்மாயில் முன் தான் குற்றவாளி அல்லர் என்றார்.

குற்றப்பத்திரிகையின்படி, 35 வயதான நபரை ஏமாற்றியதாக பொதுவான நோக்கத்துடன் இருவர் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.  கடந்த அக்டோபர் 14 அன்று இரவு 7.57 மணிக்கு சிம்பாங் ரெங்காமில் உள்ள உணவகத்தில் அவர்கள் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கமல் அவர்கள் இருவருக்கும் தலா ஒரு நபர் ஜாமீன் மற்றும்  7,000 வெள்ளி பிணை மற்றும் அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை நீதிமன்றம் மீண்டும் நவம்பர் 24 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here