காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலி

மெக்சிகோ சிட்டி –

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும் தீவிரமான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

அந்த நாட்டில் கொரோனா தாக்கி 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் மேற்கு மாநிலமான ஒசாகாவில் உள்ள சாண்டோஸ் ரெய்ஸ் டெபெஜிலோ என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்தக் காட்டுக்குள் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒசாகா மாநிலத்தின் சாண்டி யாகோ ஜூக்ஸ்ட்லா ஹூவாக்கா எனும் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்தது.

பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த காட்டுக்குள் வசித்து வந்த பழங்குடியின மக்கள் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதே போல் காட்டுக்குள் சிக்கியிருக்கும் பழங்குடியின மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். காட்டுத்தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here