துர்நாற்ற மாசுபாட்டைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் தடைப்படும்

பெட்டாலிங் ஜெயா: சுங்கை சிலாங்கூரில் உள்ள பிரதான நீர் ஆதாரத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 16) துர்நாற்ற மாசுப்படு கண்டறியப்பட்டதை அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத்தில் திட்டமிடப்படாத இடையூறுகளை ஏற்படும்.

நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அசுத்தமான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கினாலும், ஏழு மாவட்டங்களுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத்  தடங்கல் எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி நீர் வழங்கல் முழுமையாக மீட்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளான கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலம், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலலங்காட் ஆகியப் பகுதிகளை சேர்ந்த  12 லட்சம்  குடும்பங்களுடன் 1,292 பகுதிகளை உள்ளடக்கியதாக ஆயர்  சிலாங்கூர் சென்.பெர்ஹாட் (ஆயர்  சிலாங்கூர்) கார்ப்பரேட் தகவல் தொடர்புத் தலைவர் அப்துல் ஹலேம் மாட் சோம் தெரிவித்தார்.

சுங்கை சிலாங்கூர் (எல்ஆர்ஏ),  1 கட்டம் (எஸ்எஸ்பி 1), கட்டம் 2 (எஸ்எஸ்பி 2), கட்டம் 3 (எஸ்எஸ்பி 3) மற்றும் ரந்தாவ் பஞ்சாங் ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) இரவு 11 மணிக்கு மூட வேண்டியிருந்தது.

 

இருப்பினும், பெஸ்தாரி ஜெயாவில் உள்ள மாற்று நீர்த்தேக்க நடவடிக்கை (Opak) மூலம் மூல நீரை வெளியேற்றுவதற்கான விரைவான நடவடிக்கை  சுங்கை சிலாங்கூரின் கீழ்நோக்கி அசுத்தமான நீரை வெளியேற்ற உதவியது. மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு முறைகளிலும் துர்நாற்றம் மற்றும்  மாசுபாடு கண்டறியப்படவில்லை என்று அவர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறினார்.

சிலாங்கூர் சுற்றுச்சூழல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் விவகாரக் குழுத் தலைவர் ஹீ லோய் சியான் இன்று காலை ரந்தாவ் பஞ்சாங் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகை தருவதாக அறியப்படுகிறது.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் வலைத்தளம் www.airselangor.com இல் உள்ள அனைத்து தகவல்தொடர்பு சேனல்கள் மூலமாகவும் ஆயர் சிலாங்கூர் குறித்த கூடுதல் தகவல்களை  வழங்கும்.

சமீபத்திய நீர் வழங்கல் புதுப்பிப்புக்காக நுகர்வோர் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் ஆயர் சிலாங்கூர் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம். நுகர்வோரை நீரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு ஆயர் சிலாங்கூர் கேட்டுக் கொள்கிறது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here