செய்தியாளர்களுக்கும் முன்னிலை பணியாளர்களாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – டத்தோ பரம் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: கோவிட்-19 காலகட்டத்திம் மருத்துவக் குழுவினர், ராணுவம், போலீஸ், தீயணைப்பு, ரேலா ஆகிய துறையில் பணியாற்றுபவர்களை முதல் நிலை பணியாளர்கள் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கெராக்கான் கட்சியின் உதவித்தலைவர் டத்தோ பரம் தெரிவித்தார்.

தங்கள் உயிர்களை பொருட்படுத்தாது சேவையாற்றி வரும் முதல் நிலை பணியாளர்களுக்கு முதலில் நன்றியும் பாராட்டுகளும் உரித்தாக்கட்டும். அதே வேளை அரசாங்கத்தின் வழி கிடைக்கும் உண்மையான செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கி வரும் செய்தியாளர்களையும் முதல் நிலை பணியாளர்களாக சேர்த்து அவர்களுக்கான சிறப்பு மானியத்தை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தியாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களும் வெளியிடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் நிலையில் இருப்பதால் தொற்று ஏற்பட வாய்ப்பிக்கிறது என்பதனை அரசாங்கம் கவனத்தில்  கொண்டு  கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று டத்தோ பரம் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here