தன் உயிரைக் கொடுத்து 4 உயிர்களைக் காப்பாற்றிய வாயில்லா ஜீவன் தாரா

மதுரை,ஏப்ரல் 24-

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்தே கொன்று எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டது தாரா என்ற நாய்.. பாம்பு கடித்ததால் விஷம் ஏறி ‘கோமா’ நிலைக்கு சென்றுவிட்டது தாரா!!

வாயில்லா ஜீவன்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.. எத்தனையோ சமயங்களில், எத்தனையா சூழல்களில் மனிதர்களை வெட்கி தலைகுனிய வைத்து விடுகின்றன இந்த ஜீவன்கள்!!

பல சமயங்களில் தங்களை உயிரையே கொடுத்து சாப்பாடு போடும் எஜமானவர்களை காப்பாற்றியும் விடுகின்றன.. அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த ஜீவன்தான் “தாரா”!

எஜமானர் மேல் பாசம் தாரா

மதுரையை சேர்ந்த ஒருவருக்கு நாய்கள் என்றால் பிரியம்.. அதனால் வீட்டில் ‘புல்லிகுட்டா’ நாட்டு நாய் ஒன்றினை வளர்த்து வந்தார்.. அதற்கு தாரா என்று பெயரிட்டார். நாய்க்கு எஜமானர் மேல் பாசம் என்றால், எஜமானருக்கோ தாரா என்றால் கொள்ளை பிரியம்.. எப்போதுமே வெளியே தாராவை அழைத்து செல்வார்.. அதேபோல, தாராவை மீறி யாரும் வீட்டிற்குள் லேசில் போக முடியாது.. அப்படி விழிப்போடு உட்கார்ந்திருக்கும்!!!

எல்லாரையும் அதிர வைத்த

இப்போது ஊரடங்கு என்பதால் வெளியே அழைத்து செல்வதில்லை.. இந்த நிலையில் வீட்டில் குடும்பத்தினர் வேலை செய்துகொண்டிருந்தனர்.. அப்போது தாராவிடம் இருந்து ஒரு குரல் எல்லாரையும் அதிர வைத்தது.. இதுவரை அப்படி ஒரு சத்தம் எழுப்பியதே இல்லை. அதனால் பதறி போய் எல்லாருமே வெளியே சென்று பாரத்தனர்.. தாரா வீட்டை சுற்றி சுற்றி ஓடியது.. அதனால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை… குரைத்து கொண்டே ஓடியது.

பலமான சண்டை

பிறகு வாசலில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தாரா ஓடியது.. அதனால் எதுவும் புரியாமல் குடும்பத்தினரும் பின்னாடியே கார் ஷெட்டுக்கு சென்றனர்.. ஆனால் அவர்களை ஷெட்டிற்குள் வரவிடாமல் தாரா தடுத்தது.. அதையும் மீறி செல்ல முயன்றால் வெறிகொண்டு கத்தியது.. அப்போதுதான் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு அங்கிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. எங்கே குடும்பத்தினரை பாம்பு கடித்துவிடுமோ என்று நினைத்து, அடுத்த செகண்டே தாரா பாம்புடன் மோதியது.. பலமான சண்டையிட்டது… அந்த பாம்பு தாராவை கடித்து கொத்தியது.

உயிர் நீத்தது தாரா

 பல இடங்களில் தாராவுக்கு காயங்கள்.. ஆனாலும் தாரா விடவில்லை.. எதிர்த்து போராடி கொண்டே இருந்தது.. மொத்த வெறியையும் சேர்த்து குதறி எடுத்ததில் பாம்பு அங்கேயே உயிரிழந்தது. இது அத்தனையையும் கண்ட குடும்பத்தினர் கண்களில் நீர் வழிய நின்றனர்.. காயம்பட்ட தாராவை உடனடியாக கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்… உடனடி சிகிச்சையும் தரப்பட்டது.. ஆனால் விஷம் உடம்பெல்லாம் ஏறி உள்ளது.. முகமெல்லாம் வீங்கி உள்ளது… மூச்சுவிடவும் முடியவில்லை… கோமா ஸ்டேஜுக்கு சென்ற தாரா உயிர் பிரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here