பேரங்காடியில் திருட்டு – இருவர் கைது

சுங்கை பூலோ (பெர்னாமா): ஏப்ரல் 25 ஆம் தேதி இங்குள்ள புஞ்சாக் ஆலத்தில் திருட்டு மற்றும் பல்பொருள் அங்காடி திருட்டில்  ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களால்  RM43,961 இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேரங்கடி சி.சி.டி.வி கேமரா பதிவுகள் குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகள் 21 மற்றும் 42 வயதுடைய நண்பர்கள் என நம்பப்படும் இரு சந்தேக நபர்களையும் இங்குள்ள செளஜானா உத்தாராவில்  உள்ள இரண்டு வீடுகளில் கைது செய்யப்பட்டதாக சுங்கை புலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி  ஷஃபாடோன்  அபுபக்கர் தெரிவித்தார்.

ஏப்ரல் 26 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 3) வரை சோதனைகள் தொடங்கியுள்ளன. விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் ஜனவரி முதல் பேராங்காடி மூடும் வரை கழிவறையில் பதுங்கியிருந்ததாக  தகவல் வழி அறியப்படுகிறது.

இருவரும் இணைந்து பணியாற்றி மொபைல் போன் கடைகளை குறிவைத்தனர். பின்னர் அவர்கள் திருடப்பட்ட பொருட்களை பேஸ்புக்கில் விற்பனை செய்வார்கள் என்று வெள்ளிக்கிழமை (மே 8) இங்குள்ள போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேராங்கடிக்குள் நுழைவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல பொருட்களையும், இங்குள்ள செளஜானா உத்தாராவிலுள்ள ஒரு வீட்டில்  கைப்பற்றப்பட்டன. அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்கள், சிகரெட்டுகள் மற்றும் லைட்டர்கள் போன்ற திருடப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்கள் இருவருக்கும் ஏற்கனவே குற்ற செயல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பதாக  ஷஃபாடன் கூறினார். கைது செய்யப்பட்டவுடன், சுங்கை பூலோவில் மூன்று கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளை தீர்க்கப்படும் என்று  போலீசார் நம்புகின்றனர். சந்தேக நபர்கள் இருவரும் திங்கள்கிழமை (மே 10) வரை ரிமாண்ட் செய்யப்படுகிறார்கள், மேலும் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here