42-வது வயதில் குழந்தைக்கு தாயான தல-தளபதி கதாநாயகி

அஜித்குமாரின் ‘அமராவதி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோர் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் வந்தார். சங்கவி நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016இல் தனது 38-வது வயதில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது 42-வது வயதில் சங்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘எனது அழகான தேவதை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. சங்கவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here