ரகசியமாக நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்திருந்தார்.

அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

இந்த நிலையில் ராணா மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை டுவிட்டரில் ராணா வெளியிட்டிருந்தார். இந்த வருடம் இறுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ராணாவுக்கு நடிகர் நடிகைகள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here