அம்னோவிலிருந்து வெளியேறினால் அமைச்சராக இருக்க கூடாதா? தெங்கு ஜஃப்ருல் அமைச்சராக நீடிப்பார் என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர்:

ம்னோவிலிருந்து வெளியேறினால் அமைச்சராக இருக்க கூடாதா என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

தற்போது முதலீடு வர்த்தகம் தொழில்துறை அமைச்சராக இருக்கும் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் அம்னோவ்லிருந்து வெளியேறியதால் அமைச்சரவையில் அவர் நீடிக்க கூடாது என அம்னோ பொதுச் செயலாளர், அம்னோ தலைவர்,மற்றும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தெங்கு ஜஃப்ருல்அமைச்சராக நீடிப்பார் என பிரதமர் தெரிவித்தார்.

அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த பொறுப்பில் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அவரின் அமைச்சர் பதவி மற்றும் அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து இல்லை என்று, பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here