நோக்கியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 8.3 5ஜி மார்ச் மாதம் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வெளியீட்டு விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது.
இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது