மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்றுக்கு 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
57 பாதிப்புகளில் 10 வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 43 அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றாகும். வெறும் 4 தொற்றுகள் மட்டுமே உள்நாட்டினருக்கு ஏற்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.
மொத்தம் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,353 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,819ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 1,351 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 9 பேர் தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு சுவாட உபகரணங்கள் தேவைப்படுகின்றன.