ஐ நா ஆதரவில் விண்வெளி ஆய்வு திட்டம்: மலேசியாவை பிரதிநிதிக்கிறார் பிரேல்வீன்ராஜ் கோர்

ஐ நாவின் ஆதரவில் விண்வெளி ஆய்வு திட்டத்தில் (UN – BACKED SPACE PROGRAMME) உலக நாடுகளை பிரதிநிதிக்கும் 13 பேரில் பிரேல்வீன்ராஜ் கோர் மலேசியாவை பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குவாந்தானை சொந்த ஊராக கொண்டிருக்கும் 25 வயது பிரேல்வீன்ராஜ் கோர் ராஜ்வன்ட் சிங், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான விஷயங்களில் எப்போதுமே தனி ஆர்வம் கொண்டவர்.

விண்வெளி ஆய்வு தேசிய தகவல் மையத்தில் (NATIONAL POINT OF CONTACT – NPOC) இவர் மலேசியாவை பிரதிநிதிக்கிறார்.

ஐ நா ஆதரவில் செயல்படும் ஸ்பேஸ் ஜெனரேஷன் ஆலோசனைக் மன்றத்தில் (SPACE GENERATION ADVISORY COUNCIL) (SGAC) 13 இளம் தன்னார்வாளர்கள் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டனர்.

அதில் பிரோல்வீன்ராஜ் கோரும் ஒருவராவார். ஆஸ்திரியா விய்னா நகரில் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் ஜெனரேஷன் ஆலோசனை மன்றத்தில் தலைமையகத்தில் 150 நாடுகளை பிரதிநிதித்து 15,000 உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here