காதல் பகடி செய்த ரவுடியை கழுத்தை நெரித்து காட்டுக்குள் வீசினார் இளம் பெண்

ரவுடி கபிலனுக்கு லாவண்யா என்றால் உயிர்.. அவர் பின்னாடியே சென்று காதல் பகடி செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் ரவுடி கபிலனை லாவண்யாவின் பெற்றோர் உட்பட 10 பேர் சேர்ந்து அடித்து கொன்று காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை தந்து வருகிறது.

பெரம்பலூர் துறைமங்கலம் கேகேநகரை சேர்ந்தவர் கபிலன்.. 27 வயதாகிறது.. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நேற்றிரவு பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் விஏஓ அலுவலகம் அருகில் உள்ள காட்டு பகுதியில் கபிலன் விழுந்து கிடந்தார்.. உடம்பெல்லாம் ரத்தம்.. படுகாயங்களுடன் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனாலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

யார் கபிலனை அடித்து கொன்றது என தெரியவில்லை, அதற்கான காரணமும் உடனடியாக விளங்கவில்லை என்பதால் விசாரணையில் உடனடியாக தீவிரமானது.. அப்போதுதான், அதேபகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியன், அவரது மனைவி தனலட்சுமி, மகன், மருமகன் உட்பட 10 பேர் சேர்ந்து கபிலனை கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியன், தனலட்சுமி, குணசேகரன், அரவிந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அப்போதுதான் இது பழிக்குப் பழியாக நடத்தப்பட்ட கொலை என்ற தகவல் கிடைத்தது.

சுப்பிரமணியனும் கபிலனும் ஒரே பகுதியில் வசிக்கிறார்கள். சென்ட்ரிங் போடும் தொழில் செய்து வந்திருக்கிறார்கள். சுப்பிரமணிக்கு ரோகிணி, லாவண்யா, திவ்யா என்ற 3 மகள்களும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனர்.

இதில் ரோகிணியை அரவிந்த் என்பவர் திருமணம் செய்துள்ளார்.. 2-ஆவது மகளான லாவண்யாவை கபிலன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்… மேலும் தன்னை காதலிக்குமாறு லாவண்யாவை கபிலன் அடிக்கடி காதல் பகடி செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் லாவண்யா, இதை பற்றி பெற்றோரிடம் சொல்லவும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனிமேல்கா தல் பகடி இனிமேல் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.

பெரம்பலூர் ஸ்டேஷனில் புகாரும் செய்தனர்.. இதன்பேரில் ஒருமுறை போலீசார் கபிலனை கைது செய்திருக்கிறார்கள். ஜெயிலுக்கு போய் வந்தும், கபிலனுக்கு லாவண்யாவை மறக்க முடியவில்லை.. திரும்ப திரும்ப தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கொண்டே இருந்தார்.. நேற்றுகூட லாவண்யா சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்து தகராறு செய்திருக்கிறார்.

இதில்தான் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், அவரது மனைவி, உறவினர்கள் என எல்லாருமே சேர்ந்து கபிலனை வெறிதீர தாக்கி உள்ளனர்.

படுகாயமடைந்த அவரை தூக்கி கொண்டு போய் அந்த காட்டுப்பக்கம் வீசிவிட்டுப் போயுள்ளனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. ஒரு ரவுடிக்கு ஒருதலைக்காதல் வந்ததும் அந்த காதல் பகடியால்  அவர்உ யிரிழந்த விவகாரமும் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here