வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி – ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்து உரையாடுகிறார். “ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்று அவரிடம் ரசிகர்கள் கேட்டபோது.

அதற்கு அவர் 18 வயதில் இருந்தே அவரது வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி போல் இருந்தது எனவும் போட்டி முடிந்தது என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் போட்டி தொடங்கி விடுவது போல் இருக்குமாம். பள்ளிப்பருவத்தில் இருந்து உயர் கல்வியை முடிக்கும் வரை, விடுதியில்தான் தங்கி படித்தாராம்.

ஊரடங்கு நாட்களில் அவர் வீட்டிலேயே இருந்தபோது, அக்கம்பக்கத்தினர் யாரும் தங்கள் வேலையை பற்றி பேசவில்லை. இதை அவர் மகிழ்ச்சியாகவே உணர்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here