இழுபறியாக இருந்த முடித்திருத்தகத் சாதனங்கள் சுத்தப்படுகின்றன. இச்சாதனங்களுகு வணக்கம் சொல்ல பல தலைகள் ஆவலோடு காத்திருக்கின்றன. இதில் முதல் தலை எதுவாக இருக்கும் என்ற நகைப்பொலியும் கேட்கிறது.
ஏறக்குறைய மூன்று மாதங்கள், என்பது ஒரு நீண்ட இடைவெளி. இந்த இடைவெளியில் பலர் வேண்டுதல்களுக்காக முடி வளர்த்தவர்களும் இருக்கிறார்கள். மாற்றத்திற்காக முடி வளர்த்தவர்களும் இருக்கிறார்கள்.
மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள். பிள்ளைகள். எத்தனைதான் சொந்தமாக தலையைதடவிக் கொண்டாலும் மாற்றி மாற்றிச் சீவினாலும் சிகை அலங்கரிப்பாளர் கைவிரல்களில் விளையாடும் கத்தரிக்கோல்போல் வருமா? முன்பெல்லாம் இளைஞர்களின் தலையைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். கோடுகள் கோலங்களாகியிருப்பது தெரியும். அவை பூகோளப் பாடத்தை நினைவூட்டும்.
வெட்டிப்பிரிப்பதுதான் கத்தரிக்கோலின் வேலை. வெட்டித்தனமாக எவர் தலையிலும் அது விளையாடாது . கத்தரிக்கோலை நீட்டினார் என்று சிகையலங்கரிப்பாளார் மீது பழிபோடவும் முடியாது.
இந்த மூன்று மாதங்களில் வளர்ந்த முடியை என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவத்திருந்த தலைச்சுமை, இறங்க வேண்டிய தருணத்தில் எத்தனை விதத்தில் திருத்துக்கொள்ளலாம் என்ற கற்பனையும் இருக்கும். அந்த விதத்தை சொன்னதும் அதற்கான கட்டணம் என்னவாக இருக்கும்? மூன்று மாத வளர்ச்சிக்கான கட்டணம் வசூலிக்கப்படுமா?
முடித்திருத்தகங்கள் மக்கள் கூடல் இடைவெளிக்கு முதன்மைத் தரவேண்டும். அதே வேலை முடிதிருத்தப் போனோம். வந்தோம் என்பதெல்லாம் இருக்காது. காத்திருக்க வேண்டிய அவசியமும் இனி இருக்காது. முன்பதிவு செய்துகொண்டு வரவேண்டும் என்ற புதிய மாற்றத்திற்கு முடி திருத்தகம் மாறியே ஆகவேண்டும்.
இவையெல்லாம் நிர்வாகத்திறனுக்கு உட்பட்டதாகிவிட்டது. காத்திருக வேண்டிய கட்டாயம் இல்லை. சரியான நேரத்தில் வரும்போது கூடல் தூரம் பற்றிய பிரச்சினையும் இருக்காது.
மாற்றங்கள் மாற்றத்திற்காக மட்டும் அல்ல. மாறுவதற்காக.