ரோஹிங்கியர்களை எதிர்ப்போம் பதாகை: விசாரணை நடத்துங்கள் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து

மாசாயில் உள்ள ஓர் பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியர்களை எதிர்போம் என்ற பதாகை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதால் அதன் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இஸ்கன்டார் வலியுறுத்தினார்.

தவறான தொற்றத்தை ஏற்படுத்தும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்கில் தொடந்ர்து வைரலாகி வருகிறது. எனவே ஜோகூர் மாநில இஸ்லாமிய இலாகா உடனடியாக இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று தமது முகநூல் பதிவில் அவர் கேட்டு கொண்டார்.

இந்த பதாகை அவ்வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஒரு தவறான தொற்றத்தையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. இதன் தொடர்பில் இஸ்லாமிய இலாகா, அவ்வட்டார கம்பத்து தலைவர்களிடம் விசாரணை நடத்தும் படி தெரிவித்திருக்கிறேன். அப்பிரச்சினை குறித்து தகவல் தெரிந்த பின்னர் அவர்கள் தம்மிடம் தெரிவிப்பர் என்றும் அவர் அப்பதிவில் கூறினார்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களை யாரும் செய்ய வேண்டாம். உண்மை நிலை அறியாமல் தவறான விஷயங்களை பரப்புவது கொலை செய்யும் பாவத்தை விட பெரியது என்று சுல்தான் இப்ராஹிம் இஸ்கன்டார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here