செனட்டர்களாக ஐவர் பதவியேற்பு

மூத்த அரசியல்வாதியும் நெகிரி செம்பிலான் மாநில பெர்சத்து கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா ராய்ஸ் யாத்திம் உட்பட ஐவர் செனட்டர்களாக பதவியேற்றனர்.

பாஸ் கட்சியின் உதவி தலைவர் இட்ரிஸ் அகமட், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் ஸாஹிட், பெர்சத்து கட்சியை சேர்ந்த ஷெக் ரட்ஸி ஷெக் அஹமட், பாஸ் ஆதரவாளர் பேரவையின் தலைவர் என்.பாலசுப்ரமணியம் ஆகியோர் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்நிலையில் பதவி பிரமானம் எடுத்துக் கொண்டனர்.

இவர்கள் ஐவரும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு செனட்டர்களாக பதவி வகிப்பர். நாட்டிற்காக செயலாற்ற இவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தமதுரையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here