பிரேசிலில் ஒரே நாளில் 627 பேர் பலி

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 8,88,271 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 43,959 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 627 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மேலும் 20,647 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரேசிலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்புகளில், தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோ 1,81,460 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 10,767 பேர் பலியாகியுள்ளனர். ரியோ டி ஜெனிரோவில் 80,946 நோய்த் தொற்றுகள் மற்றும் 7,728 இறப்புகள் பதிவாகியுள்ளன. சியாராவில் 79,462 பாதிப்பு மற்றும் 4,999 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதிப்பும், பலியும் அதிகம் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here