அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட்- செப்டம்பரில் நடைபெறும்: நியூயார்க் கவர்னர் அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். போட்டியை நடத்துவது குறித்து ஜூன் மாதம் முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். மேலும், போட்டிகளை காண்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here