நடிகை நிஹாரிகாவுக்கு விரைவில் திருமணம்

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனும் ஐடி துறையில் பணிபுரிந்து வருபவருமான வெங்கட சைதன்ய ஜோனாலகாடு என்பவரை நிஹாரிகா திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களது திருமணத்தை குடும்பத்தினரே நிச்சயித்துள்ளனர். இவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here