லாபுவான்: இஸ்லாமிய மற்றும் முஹம்மது நபிக்கு எதிரான எந்தவொரு அவமானத்தையும் சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மலேசியா (ஜாகிம்) தொடர்ந்து கண்காணிக்கும்.
பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் துணை அமைச்சர் அஹ்மத் மர்சுக் ஷாரி, பல்வேறு சமூக ஊடக தளங்களில் பதிவுகள் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதனை வெளிகொணருவதில் ஜாகிம் தீவிரத்தை காட்டுகிறது என்றும் கூறினார். மலேசியா ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாடு. எனவே இஸ்லாமிய போதனை அனைத்து இடங்களிலும் மதிக்கப்பட வேண்டும்.
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் மதரீதியான தாக்குதல் ஆன்லைன் (சமூக ஊடகங்கள்) பதிவுகள் குறித்து ஜாகிம் அதன் கண்காணிப்பு பிரிவு வழியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது எந்தவொரு தனிநபரும் செய்யக் கூடாத ஒரு கடுமையான குற்றமாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள டாரூல் கிஃபாயா வளாகத்தில் கூட்டரசு டெர்ரிடரி இஸ்லாமிய சமய கவுன்சில் (எம்.ஏ.ஐ.டபிள்யூ.பி), கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை (ஜாவி) மற்றும் ஜகாத் சேகரிப்பு மையம் (பிபிஇசட்) ஆகியவற்றுடன் டவுன்ஹால் நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் பல இன சமூகத்தின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவது மிக முக்கியமானது என்று அஹ்மத் மர்சுக் கூறினார். நாங்கள் (தேசிய கூட்டணி) அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முன்பே நாட்டில் நிகழ்ந்த நிகழ்வு (மத தாக்குதல் பதிவுகள்) இன்னும் பரவலாக இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுதந்திரம் (சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது) மத மற்றும் இனரீதியான பதட்டத்திற்கு வழிவகுக்கும் பிற மதங்களை புண்படுத்தும் மற்றும் அவமதிக்கும் அளவிற்கு துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று அவர் கூறினார். மத ரீதியாக தாக்குதல் மற்றும் ஆத்திரமூட்டும் ஆன்லைன் பதிவுகளுக்கு தீர்வு காண மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனுடன் (எம்சிஎம்சி) ஜாகிம் தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் கூறினார்.