உலகில் அதிகம் விற்பனையான 5 ஸ்மார்ட்போன்கள்

ஒட்டுமொத்தமாக அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 முன்னணி இடங்களை பிடித்துள்ளன. 2019 ஆண்டு சர்வதேச அளவில் சுமார் 137 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 4.63 கோடி யூனிட்கள் ஆப்பிள் ஐபோன் XR ஆகும். இது சந்தையில் விற்பனையான ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களில் 3 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 3.73 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது சந்தையில் 2.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
கேலக்ஸி ஏ சீரிஸ்ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகம் விற்பனையான ஐந்து ஸ்மார்ட்போன்களில் இரு மாடல்கள் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்தி இருக்கிறது. இதுதவிர 2019 ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும். கேலக்ஸி ஏ10 கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனை சுமார் 3.03 கோடி பேர் வாங்கியுள்ளனர். இது சந்தையில் 1.8 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ50 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here