நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.

அறம் 2 படத்தில் நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம். இந்த தகவலை கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் அறம் 2 படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here