களையட்டும் வேடம்

ஒரு நாட்டின் வளப்பத்திற்குத் தீங்கு விளைகிறதென்றால் அது இனம் பார்த்து வருவதில்லை. ஒட்டு மொத்த மக்களை வீழ்த்துவதற்கு ஏவப்பட்ட சக்தியாகத்தான் இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டும்தான் என்று நாமே தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது.

தப்புக்கணக்குப் போடுவதில் இன்றைய மனிதர்கள் வெகு சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். பல தீங்குகள் விளைவதற்குத் தப்புக்கணக்கே காரணங்களாக மாறிவிடுகின்றன.

துன்பம் என்று வந்துவிட்டால் உயிரினங்கள் அனைத்தும் துன்பத்தில் சிக்கிக்கொள்ளும். இயற்கை வளமும் பாதிக்கும்.

அதன் பிறகு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அளவே இல்லாமல் போய்விடும். வேலையிழப்பு, பொருளாதாரம் , வாழ்வாதாரம் அனைத்தும் கெட்டுப்போகும். இது தனி மனிதனுக்கோ, ஒரு சமூகத்துக்கோ ஏற்படுவது அல்ல, ஒட்டு மொத்த மக்களுக்கானது என்று ஆகிவிடும்.

கொரோனா என்பதும் அதுபோலாத்தான். ஏவிவிடப்பட்டதா? இறக்குமதி செய்யப்பட்டதா? அறியாமல் நடந்ததா? இவற்றையெல்லாம் ஆராய்வது இரண்டாம் கட்ட வேலை. முதலில் தீங்கைக் கட்டுப்படுத்தும் செயலில் அரசாங்கம் வெகு துரிதமாய் இறங்கியது. அதைத்தான் புரிந்து கொண்டோம். அதன் வழி நடக்க ஒரே சிந்தனை மருந்தானது.

கடந்த மூன்று மாதங்களில் துன்பத்தை எதிர்த்துப் போராடி வெற்றிப் படியையும் தொட்டிருக்கின்றனர் மலேசியர்கள்.

உலக நாடுகளே துவண்டு கிடக்கும்போது, மலேசியம் அத்துன்பத்திலிருந்து மீண்டிருக்கிறது என்றால் எது காரணமாக இருக்கும்?

மருந்தா? உணவா? இனமா? மதமா? ஏதும் இல்லை.

ஒருங்கிணைந்த எண்ணம். ஒற்றுமையாய் துணிந்த போர்ராட்டம். இனம் பாராமல் செயல்பட்டதினால இந்த வெற்றியை அடைய முடிந்தது.

எதிரியை அழிக்க இணைந்தாநல்தான் முடியும் என்று தெரிந்த மூளைக்கு நல்லவற்றிற்கும் இணைந்து செயல்பட்டால் நாடே நன்மையடையும் என்பதில் மட்டும் இனப்பிரிவினை எதற்கு?

ஒருவர்க்கொருவர் பகை எண்ணம், தாழ்த்திப்பேசி நோகடிப்பது. மத நல்லிணக்கம் இன்மை என்றெல்லாம் பேதமை பார்க்கப்படுவது ஏன்? விகிதாச்சரம் வீண்வேலை. திறமைக்கு கட்டுப்பாடு எதற்கு?

கொரோனா எதிரி என்பதால் அழிப்பதில் தீவிரம் காட்டுகிறோம். எதிர்க்கத் தேவையானவற்றிற்கெல்லாம் முதன்மை தருக்கிறோம். அதேபோல் நல்ல செயல்களுக்கு மட்டும் பேதம் பார்க்கிறோமே! வேற்றுமை காண்கிறோமே!

அப்படிப் பார்த்தால் கொரோனாவின் இயக்கத்திற்கு அனைவரும் உடன்படுகிறோமா? அதன் ஆட்டத்திற்கு ஆடும் மக்கள் அறிந்து உணர்ந்து மனிதர்களாகச் செயல்பட்டால் அனைத்தும் வெற்றியாக இருக்கும் அல்லவா?

இதைத்தான் நாடு விரும்புகிறது.  இதற்கு மக்கள், விரும்பாமல் பிளவுக்கு ஆசைப்படுகிறார்கள். வேற்றுமைக்கு வேடம் போடுகிறர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here