அனைத்துலக விமான போக்குவரத்து ஜூலை 15 வரை கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

ஐந்தாவது கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ஆம் தேதியில் இருந்து ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதை மத்திய அரசு லாக்டவுன் என்று கூறாமல் ‘UnlockDown’ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறியது. ‘Unlockdown’ முதல் கட்டத்தில் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்பின் கோவில்கள், மால்கள், ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவித்தது. பின்னர் அனைத்துலக விமான போக்குவரத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையில் ஜூலை மாதம் அனைத்துலக விமான போக்குவரத்து குறித்து ஆலோசனையை தொடங்குவோம் என்று விமான போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 15ஆம் தேதி வரை அனைத்துலக விமான போக்குவரத்து கிடையாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சரக்கு விமான போக்குவரத்திற்கு விலக்கி அளிக்கப்பட்டுள்ளது. விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்ற விமானங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா சொந்த நாட்டிற்கு அழைத்து வருகிறது. அதேவேளையில் மே 25ஆம் தேதியில் உள்நாட்டு விமான சேவைகளையும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here