முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையர் எம்ஏசிசி ஜாமீனில் விடுதலை

ஜார்ஜ் டவுன்: பினாங்கு கடலுக்கடி சுரங்கப்பாதை விசாரணை தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கைது செய்யப்பட்ட பினாங்கு துறைமுக ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜெஃப்ரி செவ், அவரது தடுப்பு காவல் சனிக்கிழமை (ஜூலை 4) முடிவடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பினாங்கு மலேசிய ஊழல் தடுப்பு (எம்.ஏ.சி.சி) தலைமையகத்தில் ஜாமீன் வழங்கிய பின்னர் நண்பகல் 1.05 மணிக்கு செவ் விடுவிக்கப்பட்டார். அவருடன்   மாநில முதலமைச்சர் செள கோன் யியோவ், அவரது வழக்கறிஞர்களான ராம் கார்பால் சிங் மற்றும் ஆர்.எஸ்.என்.ராயர் ஆகியோர் உடனிருந்தனர். செவ் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்டபோது, அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்று ராம் கார்பால் கூறினார்.

லிவர்பூல் ரசிகரான செவ், லிவர்பூல் ஜெர்சி மற்றும் தொப்பியை அணிந்து, நான்கு சக்கர வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு செய்தியாளர்களை பார்த்து  கை அசைந்தார். சர்ச்சைக்குரிய RM6.3bil கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த விசாரணை குறித்து MACC தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ  அசாம் பாக்கி வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இரண்டு முதல் மூன்று வாரங்களில் விசாரணைகள் முடிவடையும் என்று கூறியதோடு  விசாரணை  துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here