நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் ஹருன் – துணை சபாநாயகர் அஸாலினா

நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹருன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் அஸாலினா ஒத்மான் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது அவ்விரு பதவிகளை வகிக்கும் டான்ஸ்ரீ அரிஃப் யுசோப் மற்றும் ஙா கோர் மிங் ஆகியோருக்கு பதிலாக அஸார் ஹருன் மற்றும் அஸாலினா ஆகியோரை பதவிகளில் அமர்த்த பிரதமரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ முஹிடின் தீர்மனாத்தை சமர்பித்திருக்கிறார்.

வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் நாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த தீர்மானம் கிடைக்கப்பெற்றிருப்பதை டான்ஸ்ரீ ஹரிஃப் உறுதிப்படுத்தினார். தாம் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடப்பவதாகவும் அதோடு அந்த தீர்மானம் குற்றித்த விவாதம் நடத்த அனுமதி வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here