பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு உதவி

பள்ளிப்பேருந்து ஓட்டுநர்களின் சிரமத்திற்கு வழிகிடைத்திருக்கிறது. கோவிட்- 19 தொற்றில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் இழப்பைச் சந்தித்து வந்தனர். அரசு, சாதாரண மக்களின் பாதிப்பை அறிந்து பல்வேறு கோணங்களில் உதவிகள் வழங்கியிருக்கின்றன. வழங்கியும் வருகின்றன.

வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் விடுபட்டிருந்தார்கள்.

பள்ளிகள் இன்னும் ஒருவாரத்தில் படிப்படியாக திறக்கப்பட விருக்கின்றன. அதற்குமுன் பள்ளிப்பேருந்துகள் தயாராக வேண்டும். பள்ளிப்பேருந்துகளை இயக்க அடிப்படைத்தேவைகள் இருக்கின்றன. அதன் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் அதிகம் செலவுகள் செய்யப்பட்டிருக்கின்றன .

நாட்டில் 35 ஆயிரம் பள்ளிப்பேருந்துகள் பதிவுபெற்றிருக்கின்றன என்று சாலை போக்கு வரத்துத்துறைனர் என்று அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்திருக்கிறார். தலா 600 வெள்ளி உதவித்தொகை இவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக 21 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இத்தொகை சிறியதுதான் என்றாலும் அவசரத்தேவைக்கு உதவியாக இருப்பதால், பேருந்து ஓட்டுநர்கள் நிம்மதி பெருமூச்சுவிடாலாம்.

கோவிட் -19 நெருக்கடியில் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் . அவர்களுக்கு ஏற்ற உதவிகள் குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக செய்தியும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here