” பரமபதம் “

நான்கு நாட்களில் நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கின்ற பயணத்தை, போராட்டத்தைப் “பரமபதம்” விளையாட்டு மூலமாகச் சித்தரித்துக் காட்டும் இந்தப் “பரமபதம்” திரைப்படம் உலக அளவில் 16 திரை விருதுகளை வென்றதை அங்கீகரிக்கும் பொருட்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் ( Malaysian Book of Records ) தடம் பதித்துள்ளது. இதுவே இந்தச் சாதனையைப் புரிந்த முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படமாகும். அதுமட்டுமின்றி இத்திரைப்படம் IMDb ( Internet Movie Data base ) தர சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் பாராட்டுக்குரியது.

இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வராத போதிலும் பல நாடுகளில் நடத்தப்பட்ட திரைப்பட போட்டிகளில் கலந்து கொண்டு மிகச் சிறந்த விருதுகளை வெற்றிப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. அந்த விருதுகளின் பட்டியல் பின்வருமாறு அமைகின்றது.

1. இத்தாலி –
பிரிஸ்மா இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த திரைப்படம்

2. நோர்வே –
தமிழர் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த ஒளிப்பதிவாளர்

3. இந்தியா கோயம்புத்தூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த திரைப்படம்

4. இந்தியா கோயம்புத்தூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த இயக்குனர்

5. இந்தியா கோயம்புத்தூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த தயாரிப்பாளர்

6. இந்தியா கோயம்புத்தூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த நடிகர்

7. இந்தியா கோயம்புத்தூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த தொகுப்பாளர்

8. இலண்டன் NIFF –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த தேர்வு திரைப்படம்

9. அமெரிக்கா (USA) MLC –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த தொகுப்பாளர்

10. அமெரிக்கா (USA) MLC –
இண்டர்நேஷனல் ஃலிம் ஃபெஸ்திவல் – சிறந்த ஜூரி தேர்வு கலைஞர்

11. அமெரிக்கா (USA) MLC –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த இசையமைப்பாளர்

12. அமெரிக்கா (USA) MLC –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த திரைப்படம்

13. இத்தாலி (VESURIES) –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த பின்னணி இசை

14. இந்தியா தாகூர் –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த திரைப்படம்

15. இந்தியா கோஸ்மோ –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த தொகுப்பாளர்

16. இண்டி திரை விருது –
இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்திவல் – சிறந்த திரைப்படம்

17. ‘2021’ நடைபெறும் உலகத் திரைப்படப் போட்டி வெற்றியாளர்கள் விருதுக்குத் தேர்வு.

இந்தத் திரைப்படத்தின் (teaser) முன்னோட்டத்தைப் பார்த்த தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குனர், எழுத்தாளர் திரு.K.பாக்கியராஜ் அவர்கள், BIG BOSS புகழ் நடிகர் மோகன் வைத்தியா அவர்களும், AR.Rahman வழங்கிய ‘சிம்தாங்காரன்’ புகழ் பாடகர் ‘பாம்பா’ பாக்கியா அவர்களும், இத்திரைப் படத்தைப் பற்றி வாழ்த்திப் பேசியுள்ளனர் என்பதும் பெருமைக்குரியது. இவ்வேளையில் இத்திரைப்படத்தைத் தயாரித்த சகோதரர்கள் முனைவர் DR.இலட்சப்பிரபு PhD மற்றும் முனைவர் DR.சக்கரவர்த்தி PhD அவர்கள், இத்திரைப்படத்தை இயக்கிய சகோதரர்கள் விக்னேஷ் பிரபு மற்றும் தனேஷ் பிரபு அவர்கள், இத்திரைப்படத்தில் நடித்த நாட்டின் தலைச் சிறந்த நடிகர்கள் KS.மணியம், THR மாறன், பென் ஜி, G அகோந்திரன், விக்கி நடராஜன், சிங்கை ஜெகன், விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு, கௌசல்யா ரவி, ரிஷிகேசன், சசிவாரூபன், விமல் நாராயணன், பவித்திரன், காந்தி நாதன், டத்தோ கபார், இசை அமைப்பாளர்கள் பாலன்ராஜ் மற்றும் ஜெகதீஷ் இணையர், பாடலாசரியர்கள் ஃபீனிக்ஸ் தாசன் மற்றும் முனைவர் கவிஞர் இரா.இலட்சப்பிரபு, பாடகர்கள் ‘பாம்பா’ பாக்கியா (India AR Rahman புகழ்), யுஹாஷினி மதியழகன், ஷீ ஷே, கணேசன் மனோகரன், தினேஷ் குமார், ஹர்டி பீ, ஹம்சினி பெருமாள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜெகதீஸ்வரன், யோகேந்திரன், தீபன் ராஜ், பிரகலாதன், கோகுலன், டெஸ்மண்ட், ஷாமராஜ், சுவாரி, வாணிஸ்ரீ, VFX Magmyth Studio (India), SFX Team J தோனி (India), ஆகியோர் இத்திரைப்படத்தில் தமது முத்திரையைப் பதித்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. மற்றும் இத்திரைப்படத்தின் வெற்றிக்குத் துணையாக இருந்த அனைத்து தகவல் தொடர்பு அன்பர்களுக்கும், எல்லா நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

 

“வாழ்க பரமபதம் வெல்க வெற்றி நிதம்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here