முன்னாள் அதிகாரியை சந்தித்தார் ஓசிபிடி நிக் எஸானி

கடந்த 1945ஆம் ஆண்டிலிருந்து காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி டான்ஸ்ரீ ஜே.ஜே.ராஜை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் படைத் தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்தார்.

தற்போது 99 வயதான அவரை இன்று காலை அவரின் இல்லத்திற்குச் சென்று நிக் எஸானி சந்தித்தார்.

கடந்த 1976ஆம் ஆண்டில் புக்கிட் அமான் நிர்வாக குழு இயக்குனராக பணியாற்றியவர் டான்ஸ்ரீ ஜே.ஜே.ராஜ். இச்சந்திப்பின் போது கடந்த கால சம்பவங்களை அவர் நினைவுக் கூர்ந்தார்.

அரச மலேசிய காவல் துறையில் நீண்டக் காலம் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்து வருகிறார் ஏசிபி நிக் எஸானி.

அதோடு, இவ்வாறான சந்திப்புகளின் மூலம் முன்னாள் அதிகாரிகள் ஆற்றிய சேவைகளை அங்கீகரிப்பதோடு, அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அறிந்துக் கொள்ள முடிகிறது என்று நிக் எஸானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here