டொனால்ட் டிரம்ப்பை விமர்சனம் செய்து எழுதப்பட்ட புத்தகத்தின் அனைத்து பிரதிகளும் விற்று சாதனை..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விமர்சித்து அவரது அண்ணன் மகள் எழுதியுள்ள புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்தன.

டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக அத்தனை புத்தகங்களும் விற்றுத் தீர்ந்ததாக வெளியீட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சித்தாபாவின் மோசமான நடத்தைகள் குறித்தும் குறுக்குப் புத்தி குறித்தும் டிரம்பின் அண்ணன் மகள் எழுதியுள்ள புத்தகம் சுவாரசியமான பல்வேறு தகவல்களைக் கொண்டிருப்பதாகக் சொல்லப்படுவதால் அதன் தேவையும் அதிகமாகியுள்ளது.

மேரி டிரம்ப் எழுதியுள்ள ‘டூ மச் அண்ட் நெவர் எனாஃப் ஹொவ் மை ஃபேமிலி கிரியேட்டடு தி மோஸ்ட் டேஞ்சரஸ் மென்’ என்ற புத்தகமானது கடந்த செவ்வாயன்று விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில் புக்கிங் விற்பனை, e-book மற்றும் ஆடியோ என ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முதல்நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக வெளியிட்டாளர்கள் தரப்பு அறிவித்துள்ளது.

இந்த புத்தகத்தில் டிரம்ப் மிக மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here