தீங்கு, அதைத்தான் நேசிக்கிறோமா?

தற்போது எல்லாமே டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு விட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் 1000 மைல் தொலைவில் இருப்பவருடன் கூட பேச முடியும். உலகத்தில் என்ன நடந்தாலும் என்ன விஷயங்கள் என்றாலும் கையளவு மொபைலில் அறிந்து கொள்ள முடிகிறது.

தற்போது தொலைத்தொடர்பு என்பது பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். ஒருபக்கம் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு நன்மை தந்தாலும் மற்றொரு புறம் நமக்கு நிறைய தீமைகளை தந்துள்ளது.

கையிலேயே மொபைல் இருப்பதால் மக்கள் நிறைய தகவல்களை உட்கார்ந்தே இடத்திலயே தெரிந்து கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது ரொம்ப அதிகமாகி விட்டது. நாள் முழுவதும் சாட்டிங் செய்தல், முகநூல் போன்ற விதத்தில் நம் வாழ்க்கையே மாறி விட்டது.

இருப்பினும் இந்த சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவது நமக்கு தீங்கு விளைவிக்கிறது. இதில் நிறைய பேருக்கு சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நீங்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தொலைபேசியில் முதல் , கடைசி விஷயம் குறித்து ஒரு முறை பார்த்துக் கொள்வது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு நாள் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றை பார்க்க எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். இப்படி சமூக வலைத்தளங்களை அடிக்கடி விஷயங்களைப் பார்க்கும்போது, தூங்கும் போது கூட அந்த விஷயங்களை சிந்திக்கத் தோன்றும். காலையில் எழும் போது கூட அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற செயல்கள் சமூக ஊடகங்களில் அடிமையாகி இருப்பதை காட்டுகிறது.

சமூக ஊடகத்தைத் தள்ளி வையுங்கள், பொதுவாக எல்லாரும் பணியில் இருக்கும் போது நேர இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் சமூக ஊடகங்களை பார்ப்பதே வாடிக்கையாக இருக்கும். இப்படி ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் கூட சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது பிரச்சனையில் முடியும்.

இந்த சிறிய இடைவெளியில் இப்படி சமூக ஊடகங்களில் அடிமையாவதற்கு பதிலாக ஒட்டுமொத்த இடைவெளி நேரத்தை ஒன்றாக சேர்த்து எதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்யலாம். நடைப்பயிற்சி, சிறிய ரிலாக்ஸ் பயிற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம்.

தொலைபேசி அறிவிப்பு உண்மையில் மூளையில் ஒரு டோபமைன் விளைவை உண்டாக்குகிறது. இது மகிழ்ச்சியாக இருப்பதற்கான ரசாயனம் ஆகும். மொபைலில் அறிவிப்பு வந்ததும் நம்மை அறியாமல் உள்ளுக்குள் சந்தோஷம் அடைகிறோம். அறிவிப்பை உடனே பார்க்க முற்படுவது கூட சமூக வலைத்தளங்களில் அடிமையாகி இருப்பதை காட்டுகிறது. எனவே, அறிவிப்பு வந்ததும் பார்க்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் குறையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here