சமூக இடைவெளியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் உற்சாகத்தில் சீன மக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்ட பொதுச் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போக்கானது 2 ஆவது நிலையிலிருந்து 3ஆவது நிலைக்குக் குறைந்துள்ளது.

இதனால், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

அதோடு, சீனாவில் தொற்றுக்கான ஆபத்துகள் குறைவாக உள்ள இடங்களில் திரைப்பட அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, மாநிலங்களுக்கிடையேயான சுற்றுலா பயணமும் தொடங்கியுள்ளது. ஹுபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் வாழ்ந்து வரும் திரு வாங் என்பவர் இச்செய்தியைக் கேட்டவுடனே சீனாவின் கன் சூ மாநிலத்திற்குக் குடும்பத்தினருடன் செல்வதற்கான பயணச் சீட்டுகளை வாங்கியுள்ளார்.

அவர்கள், கன் சூ மாநிலத்தில் 6 நாட்கள் நீடிக்கும் சுற்றுலா பயணம் மேற்கொள்வர்.

இந்த நிலையில், நோய்த் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது திரையரங்குகளைத் திறந்துவிட்டுள்ளது.

நோய் தொற்று குறைவாகக் காணப்படும் ஷாங்காய், ஹங்சோயு, குய்லின் ஆகிய நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

14 நாள்கள் கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்படாத பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியுடன் கடைபிடிப்பவர்கள் மாஸ்க் அணிந்த ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்குக்கு வந்து, செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் படங்களைப் சமுக வலைத்தளங்களில் செல்ஃபிகளை பகிர்ந்து வருகிறார்கள்.

உலகளவில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக திரையரங்குகள் மூலம் அதிக வருவாயை ஈட்டும் சீன அரசு, கொரோனா தாக்கத்தால் 32,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 1.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here